
PARL உறுப்பினர் சிந்தக ராஜபக்சவின் கைது சட்டவிரோதமானதும் தவறானதுமாகும்
Published
PARL உறுப்பினர் சிந்தக ராஜபக்சவின் கைது சட்டவிரோதமானதும் தவறானதுமாகும்
காணி மற்றும் விவசாய உரிமைகள் மற்றும் மறுசீராக்கலுக்கான இயக்கத்தின் (MONLAR) தலைவரான சிந்தக ராஜபக்ச பல்கலைக்கழக ஒன்றிய மாணவர் சம்மேளனத்தின் சமாதானமான ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியமைக்காக 18 ஆகஸ்ட் 2022 இல் கைதுசெய்யப்பட்டார். இவருடன் சேர்த்து மேலும் 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டக்காரர்களுள் மூன்று பேர் அன்றில் இ;ருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இது தாமே போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறைமிக்க சட்டத்தின் அப்பட்டமான து~;பிரயோகமாகும். சிந்தகவும் ஏனையோரும் ஆகஸ்ட் 19 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர். அங்கே ஏனையோருக்குப் பிணை வழங்கப்பட்டபோதும் சிந்தக தொடர்ந்தும் மறியற்சிறையில் வைக்கப்பட வேண்டும் எனப் பொலிசார் விடுத்த வேண்டுகோளையடுத்து 2022 ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை அவரை மறியல் சிறையில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இவரின் மறியல் சிறையினை நீட்டிக்குமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்தமைக்கான காரணம் சிந்தகவின் நீண்ட காலச் செயற்பாட்டியத்தினைத் தண்டிப்பதும் அநீதிக்கு எதிராகப் போராடுவதற்காகச் செயற்திறன்மிக்க வகையில் பிரசைகளை அணிதிரட்டியமையினைத் தண்டிப்பதும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.
பல தசாப்தங்களாக, இலங்கையிலுள்ள பல சமுதாயங்களின் சுற்றாடல் பாதுகாப்புக்கான மற்றும் காணி உரிமைகளுக்கான இயக்கங்களின் அசைக்க முடியாத ஆதரவாளராகச் சிந்தக இருந்து வருகின்றார். இவர் விவசாயிகளின் நெருங்கிய நண்பராகச் செயற்பட்டு வருகின்றார். குறிப்பாகத் தமது காணிகளின் உடைமை பறிக்கப்பட்ட விவசாயிகளின் நண்பராக இருந்து வருகின்றார். இராணுவமமயாக்கப்பட்ட காணி அபகரிப்புக்கு எதிராக நீண்ட காலமாகப் போராட்டம் நடத்திவரும் வடக்கு கிழக்குச் சமுதாயங்களுடன் சிந்தக என்றுமே இருந்து வருகின்றார்.
புத்தளவில உள்ள எளிய கிராமிய விவசாயக் குடும்பத்தினைச் சேர்ந்த சிந்தக மூன்று பெண் குழந்தைகளின் தந்தையாவார்;. இரண்டாம் தலைமுறைச் செயற்பாட்டாளரான சிந்தக அவரின் தந்தையைப் போன்று இலங்கையில் மிகவும் விளிம்புநிலையில் உள்ளவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்காகத் தனது வாழ்வினை அர்ப்பணித்துள்ளார். தனது சமூக நீதிப் பணிக்காக 1988 இல் புத்தளவில் படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை மைக்கல் ரொட்ரிகோ (OMI) உடன் ஓர் இளம் நபராகச் சிந்தக பணியாற்றியுள்ளார்.
இலங்கையில் விளிம்பு நிலையிலுள்ள சமுதாயங்களின் காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினை தொடர்பாகப் பணியாற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் ஒரு தன்னார்வக் கூட்டிணைவான காணி உரிமைக்கான மக்களின் கூட்டமைப்பில் (PARL) சிந்தக 2011 முதல் முனைப்பான உறுப்பினராக இருந்து வருகின்றார்.
Pயுசுடு என்ற ரீதியில் சிந்தக உள்ளிட்ட அனைத்துப் போரட்டக்காரர்களினதும் கைதினையும் அவர்கள் மீதான அச்சுறுத்தலையும் நாம் கண்டிக்கின்றோம். இந்த நாட்டில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் சகல சந்தர்ப்பங்களிலும் தங்களின் அடிப்படை உரிமைகளை அணுகக்கூடியவர்களாக உள்ளனர் என்பதை உறுதிப்படுத்துவதற்குப் போராடும் சிந்தனையாளர்களான தொழில்ரீதியானவர்களான மற்றும் செயற்பாட்டாளர்களான இந்த நாட்டின் அனைத்துப் பிரசைகளையும் அச்சுறுத்துவதற்கான ஒரு வழியாகவே நாம் இந்தக் கைதுகளை நோக்குகின்றோம். மேலும், அதிகாரத்திலுள்ளவர்களைப் பொறுப்புக்கூற வைப்பதற்காக அஹிம்சை வழியில் ஆர்ப்பாட்டம் செய்து விமர்சனங்களை முன்வைப்பதற்கான ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கான முயற்சிகளின் பாகமே இவையாகும்.PARL என்ற ரீதியில் நாங்கள் கருத்து வேறுபாட்டிற்கான உரிமைக்கு ஆதரவாக உறுதியாக நிற்பதுடன் அதை ஜனநாயகத்தின் முக்கியமான ஒரு தூணாகவும் கருதுகின்றோம். அரச அனுசரணையுடன் இடம்பெறும் அச்சுறுத்தல்களையும் உரிமைகளின் நசுக்கல்களையும் நாம் திட்டவட்டமாகக் கண்டிப்பதுடன் ஒரு ஜனநாயக நாடு என்ற நன்மதிப்பு ஏற்கனவே இழக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நன்மதிப்பு மேலும் இழக்கப்படுவதற்கே இது வழியமைக்கும். சிந்தக மீதான மற்றும் அவர் போன்ற ஏனையோர் மீதான தாக்குதல்கள் விளிம்புநிலையில் உள்ள மக்களின் உரிமைகளுக்காகப் போரட எழுந்து நிற்கும் சகல பிரசைகளின் மீதுமான நேரடியான தாக்குதலாகும்.