2011இல் இருந்து நில / காணி உரிமைகள் மற்றும் நீதிக்காக வலியுறுத்திகிறது
நில உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு (PARL) என்பது சிவில் சமூக அமைப்புகளும் தனிநபர்களும் இணைந்து உருவாக்கிய ஒரு தன்னார்வ கூட்டமைப்பாகும். இது நில அபகரிப்புக்கு எதிராகவும், இலங்கையெங்கும் உள்ள சமூகங்களின் காணி, வீடு மற்றும் சுற்றுச்சூழல் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் செயல்பட்டு வருகிறது. 2011 முதல் உணவுப் சுயாதீனமும் சுற்றுச்சூழல் நீதியும் என்ற கொள்கைகளின் அடிப்படையில் PARL தனது பணிகளை முன்னெடுத்து வருகிறது.
சிறு நில பெண் விவசாயிகள், மீனவ சமூகங்கள், தோட்டத் தொழிலாளர்கள், செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் மற்றும் அவர்களது அமைப்புகளை ஒன்றிணைக்கிறது. இது அம் மக்களை அவர்களது நிலங்கள், மீன்பிடி நீர்ப்பரப்புகள் மற்றும் வீடுகளிலிருந்து அகற்றுவதற்கு எதிராகப் போராடுவதோடு, இடம்பெயர்ந்த சமூகங்களின் போராட்டங்களோடு துணை நிற்கிறது.
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மலையக சமூகங்கள் உட்பட — (இலங்கைத்) தீவின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறும் பிரச்சாரங்கள் மற்றும் மக்கள் இயக்கங்களை ஒன்றிணைக்கும் ஒரு தளத்தினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதிப்பை உருவாக்கியவர் அல்லது பாதிக்கப்பட்ட சமூகத்தின் அடையாளம் எதுவாக இருந்தாலும், அனைவரையும் இணைக்கும் வகையில் இது செயல்படுகிறது.
இன் பணி என்பது சமூகங்களின் போராட்டங்களை ஆதரிக்கும் மற்றும் பிரதிநிதித்துவம் செய்யும் வலுவான மக்கள் இயக்கமாக அமைவது
பெண்கள் மற்றும் பிற ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் நில உரிமைகளை மீறும் நில (காணி) அபகரிப்பு, நில (காணி) இழப்பு மற்றும் பாகுபாடான கொள்கைகள் மற்றும் சட்டங்களுக்கு எதிராக போராடுதல்
வறுமைக்கு உட்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களின் நில உரிமைகளை உறுதி செய்யும் மற்றும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் முற்போக்கான கொள்கை மற்றும் சட்ட மாற்றங்களை ஆதரித்தல்
“இலங்கையில் நிலத்தை நீடித்து நிலைத்த முறையில் பயன்படுதுவதன் ஊடாக சமூக உரிமைகளை, குறிப்பாக ஓரங்கட்டப்பட்ட மற்றும் நலிவுற்ற சமூகங்களின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் ஆதரித்தல்”
நிலப் பிரச்சனைகள் / காணித் தகராறுகள் மற்றும் வெளியேற்ற அபாயங்களை எதிர்கொள்ளும் சமூகங்களை ஆதரித்தல்.
நில உரிமைகளை பாதுகாக்கும் கொள்கை மாற்றங்கள் மற்றும் சட்ட சீர்திருத்தங்களை வலியுறுத்தி வழிகாட்டுதல்
நில உரிமை மீறல்கள் தொடர்பிலும் நிலைபேறான நீதிமிக்கவுமான மாற்று வழிகளை வெளிப்படுத்துவதற்கும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் அவற்றை ஆவணப்படுத்தல்.
ஓரங்கட்டப்பட்டவர்களின் குரலை பெருப்பிக்க, பொதுமக்கள் விழிப்புணர்வை உருவாக்க, அரசாங்கத்தை அழுத்தம் கொடுக்க, மற்றும் நில உரிமை மீறல்களை ஆவணப்படுத்த ஊடகம் மற்றும் தொடர்பாடலை பயன்படுத்தல்
நிலம் ஒரு குடிமகனின் மாற்றமுடியாத உரிமை என்பதை உணர்ந்து அங்கீகரிக்கிறது. இந்த உரிமை மீறப்படும் சந்தர்ப்பங்களில் PARL அந்தப் தனிநபர்களுக்கு / குழுக்களுக்கு ஆதரவு வழங்க நடவடிக்கை எடுக்கும்.
நிலம் என்பது ஒரு மனித உரிமை மற்றும் பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும். தனிநபர் உரிமைகளையும் பொதுவான உரிமைகளையும், சமூகங்களுக்குள் விளிம்புநிலை (பாலினம், சாதி, பாலியல் நோக்குநிலை போன்றவற்றின் அடிப்படையில்) உரிமைகளையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
இனம், சாதி, மதம், பாலினம், புவியியல் அல்லது பிற அடிப்படைகள் எதுவாகினும் பாகுபாடின்றி எந்த சமூகத்தின் போராட்டங்களையும் ஆதரிக்கும்
நாட்டின் எந்த ஒரு பிரசையும் எந்த ஒரு பகுதியில் வேண்டுமானாலும் வாழ்விடத்திற்காக அல்லது பிற நோக்கங்களுக்காக அங்குள்ள சமூகத்தின் தற்போதைய வாழ்வியலை (வாழ்க்கை/ முறை வாழ்வாதாரத்தை) வன்முறையால் பாதிக்காமலும் அல்லது சுற்றுச்சூழல் அமைப்புகளை அழிக்காத வகையிலும் நிலத்தைப் பயன்படுத்தும் உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
நில உரிமைகள் எந்த மனிதனின் மற்ற உரிமைகளிலிருந்தும் விலக்க முடியாதவை: அடையாளம்/கலாச்சாரம், பிரிக்க முடியாத தன்மை.
நில உரிமையின் பரந்த தன்மை என்பது நில உரிமை வெறுமனே அதன் சட்ட உடைமை மட்டுமல்லாமல் அது வாழ்வாதாரம், அடையாளம் மற்றும் கலாச்சாரத்துடன் கொண்டுள்ள இணைப்பின் அடிப்படையிலும் உள்ளது என்பதை அங்கீகரித்தல்
தங்கள் உரிமைகளுக்காக போராடும் ஒரு சமூகத்தின் திறன் மற்றும் திறமைகளை PARL அடையாளம் காண்கிறது. சமூகத்தினால் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளின் போது அவர்களின் இயல்திறனை உணர்ந்து அங்கீகரித்து அவர்களின் போராட்டத்தில் நாம் பங்களிப்பு செய்வோம்.
நாட்டின் நில கொள்கைகளில், மூலதன தேவைகளைவிட உள்ளூர் சமூகங்களின் மற்றும் சுற்றுச்சூழலின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைகளை ஆதரிக்கிறது.