
மக்கள் காணி ஆணைக்குழு அறிக்கையின் இணையத்தள வெளியீடு.
Published
காணி முகாமைத்துவம், காணிச் சட்டங்கள் மற்றும் தற்போது நடைமுறையிலுள்ள காணிக் கொள்கைகளின் காரணமாக மக்கள் எதிர் நோக்குகி;ன்ற பிரச்சனைகள் மற்றும் தொடரச்சியான விளைவுகள் பற்றி அறிந்துகொள்ளும் நோக்கில் மக்களின் காணி ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. மேலும் இக் கலந்துரையாடற் செயற்பாடானது, அரச கொள்கை வகுத்தலில் மக்களது கருத்துக்கள் தொடர்ச்சியாக உள்வாங்கப்படுவதில்லை என்பதில் அவதானஞ் செலுத்துகின்றது.
மக்களுக்கான காணி தொடர்பான ஆணைக்குழு (PLC), பதினொறு (11) அனுபவம் வாய்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள், கல்வித்துறை சார்ந்தவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களை உள்ளடக்கியுள்ளது இவ் ஆணைக்குழுவானது, 2019 மார்ச் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் கள விஐயங்களை மேற்கொண்டு அம்பாறை, அநுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, கொழும்பு, காலி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, ஹட்டன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மொனராகலை, முல்லைத்தீவு, மாத்தறை, பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய 18 மாவட்டங்களில் பிரச்சனைக்குரிய பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் மற்றும் பாதிக்கபட்ட மக்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டறிந்தது. இவ் ஆணைக்குழுவானது மொத்தமாக 428 - பெண்கள், 452 - ஆண்கள், 5 - ஏனையோர் அடங்கலாக 885 பேருடன் உரையாடியது.. Pயுசுடு வலையமைப்பின் பங்காளர்கள் இக் கலந்துரையாடல்களை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். இப்பிரதேசங்கள் பூகோள ரீதியில் பல்வேறு பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் அமைந்ததோடு பல்வேறுபட்ட இனங்கள், சமயங்கள், சமூகங்கள் மற்றும் பொருளாதார பின்புலங்களைக் கொண்டவர்கள் உள்வாங்கப்படுகின்ற நோக்கிலேயே தெரிவு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்ட அமைவிடங்கள், இடம்பெயர்ந்த மற்றும் காணிகளற்ற மக்கள், காணிகளிலிருந்து வெளியேற்றபட்ட அல்லது வேறு இடத்தில் குடியமர்த்தப்பட்ட, அபிவிருத்தி, நகர மயமாக்கல் மீள் உருவாக்கம் இடம்பெறுகின்ற மற்றும் திட்டமிடப்பட்டுள்ள பிரதேசங்கள் என்பவற்றிற்கு இவ் ஆணைக்குழுவானது விஐயம் செய்தது.
காலம், வளங்கள், பங்காளர்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் ஏனைய நடைமுறைசார் சவால்கள் பற்றிய மட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் ஆணைக்குழுவினால் விஐயம் செய்ய முடியவில்லை. காலவரையறையானது மக்களுடனான கலந்துரையாடல்களின் பூரணத்தன்மையில் தாக்கஞ் செலுத்தியுள்ளது. நீண்ட கால நீதியின்மையினால் பரம்பரை ரீதியாக மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விபரிப்பதற்கு அதிக காலந் தேவையானது என்பது வெளிப்படையானதும் எதிர்பார்க்கப்பட வேண்டியதுமாகும். அத்துடன் பால்நிலை சார்ந்த நீதியின்மை மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பில் ஆழமாக ஆராய்வதற்குப் போதுமான அளவு காலம் இருக்கவில்லை. இலங்கையின் காணி தொடர்பான கொள்கைகள், சட்டங்கள் மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பான வழிகாட்டியாக செயற்படுவதே, இவ்வறிக்கையின் நோக்கமாகும். காணிப் பிரச்சனை காரணமாக அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் பிரச்சனைகளுக்கு பதிலளிக்கும் விதத்தில், தற்போது நடைமுறையிலுள்ள பொறிமுறைகளை மாற்றியமைப்பதன் மூலம் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு சூழலின் நிலைத்திருக்கும் தன்மை மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக சமூக பொறுப்புணர்வை மேம்படுத்தல்போன்ற விடயங்களை இவ்வறிக்கை மையப்படுத்தியதிள்ளது. இவ் அறிக்கையானது காணிப் போராட்டங்களுக்கு தீர்வை வழங்க மாட்டாது. மாறாக காணி மற்றும் மக்களுடன் தொடர்புபட்டு செயற்படுவதிலுள்ள சிறந்தநடைமுறைகள், பொறிமுறைகள், வழிகாட்டி விழுமியங்கள் மற்றும் முன்னுரிமையளிக்க வேண்டியவை போன்றவற்றை பரிந்துரை செய்கின்றது.
இவ் ஆணைக்குழுவும், காணி உரிமைக்கான மக்களின் கூட்டமைப்பும் (PARL) சேர்ந்து இந்த அறிக்கையையும் பரிந்துரைகளையும் பல்வேறுபட்ட அரச பங்குதாரர்களான அமைச்சுக்கள், காணி, இழப்பீடு, இடைக்கால நீதி, நல்லிணக்கம், பெண்களின் உரிமை, அபிவிருத்தி (ஒரு சில விடயங்கள் மாத்திரம் பெயரிடப்பட்டுள்ளது) ஆகியன தொடர்பில் சேவையாற்றுகின்ற அரச ஸ்தாபனங்களுக்கும் தொகுத்து வழங்க எதிர்பார்க்கின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் தாங்களே முன்னெடுக்கப்படவிருக்கின்ற முன்னெடுப்புக்களின் விளைவாக எதிர்பார்க்கப்படுகின்ற பல்வேறுபட்ட கொள்கைத் திருத்தங்கள், நிறுவன மற்றும் பொறிமுறை மறுசீராக்கங்கள், காணி மற்றும் காணி நிர்வாகத்தில் மக்களின் அர்த்தபூர்வமான பங்களிப்பு மற்றும் நிலைத்திருக்கத்தக்க கலந்துரையாடல்கள் மூலமான பரந்துபட்ட மறுசீரமைப்புகள் என்பன இவ்வறிக்கையில் குறிப்பிடப்படுகின்ற பரிந்துரைகளில் உள்ளடங்குகின்றன. மேலும் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இக் கலந்துரையாடல்களில் பங்குபற்றிய மக்களுடனும், நாடு பூராகவும் பல்வேறு காணி தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்கின்ற மக்களுடனும் இவ் அறிக்கையை பகிர்ந்துகொள்ள எதிர்பார்க்கின்றோம். பகிரப்பட்ட அனுபவங்களும் ஒருங்கிணைந்த பரிந்துரைகளும் தற்போது இம் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற ஆதரித்துவாதாடல் மற்றும் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் இந்த நடவடிக்கைகள் கவரப்பட்டு மேலும் வலுப்பெற உதவுவதோடு மக்கள் தங்களது தேவைகருதி இந்த உள்ளடக்கங்களை தங்களது செயற்பாடுகளில் முன்னோக்கிக் கொண்டு செல்வர் என நாம் எதிர்பார்க்கப்படுகின்றோம்.
மக்கள் காணி ஆணைக்குழு அறிக்கையை பார்வையிட கீழுள்ள லிங்கினை பயன்படுத்தவும்-
https://drive.google.com/drive/folders/19CGinDt1mr21sBWSoouJTQhxPGKw3-Yw?usp=sharing