ஹிங்குறாணை சீனித் தொழிற்சாலை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான அறிக்க
Published
ஹிங்குறாணை சீனிக் கூட்டுத்தாபன கரும்பு உற்பத்திக்கான காணி சுவீகரிப்பால் நிலம்
மற்றும் விவசாயப் பொருளாதாரத்தினை இழந்த குடும்பங்களும், கரும்பு உற்பத்தியால்
ஏற்படும் நஷ்டம் காரணமாக விவசாயத்தினை கைவிட்டவர்களும், அவ்வாறு கைவிட்டதன்
காரணமாக தங்களுடைய நிலத்தினை நிகழ்காலத்தில் இழந்து கொண்டிருக்கும்
விவசாயிகளும், கல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அரசினால் உருவாக்கப்பட்ட
குடியேற்றங்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளுக்கு இதுவரை மாற்றுக் காணிகளோ,
இழப்பீடுகளோ கிடைக்கப் பெறாத விவசாயிகளும் ADLAR,HEO பயனாளிகளில் ஒரு
பகுதியினராக செயற்பட்டு வருகின்றனர்.
இவர்களுடைய நீண்டகால கோரிக்கைக்கு அமைவாக பாதிப்புகள் தொடர்பான
உண்மைகளை வெளிக்கொண்டுவர இவ் ஆய்வானது மூன்று சுயாதீனமான
ஆய்வாளர்களுடைய பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை தற்போது வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியையும், உணவுக்கான
நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளதை நாம் அறிவோம். எனவே இந்த நெருக்கடியிலிருந்து
விடுபடுவதற்கு இலங்கையின் பெரும்பான்மையான சிறு விவசாயிகள் குறிப்பாக கிராமப்புற
விவசாயிகள் பெரும் பங்களிப்பைச் செய்ய வேண்டும். எனவேதான் இம் முயற்சியூடாக
எதிர்பார்க்கப்படுவது, அம்பாறை மாவட்டத்திலுள்ள விவசாய நிலங்களை வினைத்திறனாகப்
பயன்படுத்தல், நிலத்தினை இழந்தவர்களுக்கு நீதமான தீர்வினை வழங்குதல், சிறு
விவசாயிகள் அவர்களுடைய நிலத்தினை சுதந்திரமாகப் பயன்படுத்தி கிராமிய உணவு
உற்பத்திகளை அதிகரித்தல், கிராமிய அபிவிருத்தியூடாக நாட்டினது நிலைபேறான
பொருளாதார அபிவிருத்திக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் பங்களிப்புச் செய்தல் ஆகும்.