
ஹிங்குரான கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள்
Published
ஹிங்குரான கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள்
1956-ல் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் கரும்புச் செய்கைக்காக காணிகள் பெறப்பட்டமையால் அவற்றில்பாரம்பரியமாக கரும்புச் செய்கையில் ஈடுபட்டுவந்த விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் காணிகளை இழந்துள்ளனர். இவர்களுள் ஒரு சிலருக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் கரும்புச் செய்கைக்கு மட்டும் காணிகள்வழங்கப்பட்டுள்ளபோதும் அவற்றுக்கான முறையான உரித்து வழங்கப்படவில்லை.
மேலும் அவ்வாறு வழங்கப்பட்டுள்ளசில மாற்றுக் காணிகள் கரும்புச் செய்கைக்குப் பொருத்தமற்றவையாக இருப்பதால் கரும்புச் செய்கைவிவசாயிகளுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. கம்பனி விவசாயிகளின் பெயரில் பயிர்ச்செய்கைக்கான கடன்களைவங்கிகளிலிருந்து பெற்றுள்ளதால் விவசாயிகள் கடனாளிகளாக்கப்பட்டுள்ளனர்.
மொத்தத்தில் கம்பனி நிருவாகம் கரும்புச் செய்கை விருத்திக்குத் தேவையான முதலீடுகளைச் செய்ய தவறியுள்ளதால்கரும்புச் செய்கையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு விவசாயியையும் அது பெருமளவில் பாதித்துள்ளது.
நாடு முழு அளவில் பொருளாதார மற்றும் உணவு நெருக்கடியைச் சந்தித்துள்ள தருணத்தில் கரும்புச் செய்கைக்காகபயன்படுத்தப்பட்ட காணிகள் அதற்குப் பொருத்தமற்றதாக மாறி உள்ளதால் எந்தப் பயன்பாட்டுக்கும் எடுக்கப்படாதுதரிசு நிலமாவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கரும்புச் செய்கை நிமித்தம் பெறப்பட்டுள்ள காணிகள் (பெரும்பாலும் பலவந்தமாக) முஸ்லிம்விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டவையாக இருப்பதோடு அவை பின்னர் குடியமர்த்தப்பட்ட சிங்கள விவசாயிகளுக்குவழங்கப்பட்டுள்ளதால் இனங்களுக்கு இடையில் ஓர் சமூகமற்ற நிலை உருவாகவும் இது காரணமாக அமைந்துள்ளது.
இப்பிரச்சனையை தீர்ப்பதற்கான எமது யோசனைகள்
குறுகியகால யோசனைகள்
கரும்புச் செய்கைக்காக பயன்படுத்தப்படாது தரிசு நிலமாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள காணிகளைஉணவுப் பயிர்களை உற்பத்தி செய்வதற்காக விவசாயிகளுக்கு வழங்குதல்.
அரசாங்கம் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் விவசாயத் திணைக்களம் மற்றும் ஏனைய அரசாங்க நிறுவனங்களுடன்இணைந்து கரும்புச் செய்கைக்காக இனங்காணப்பட்டுள்ள காணிகளின் பொருத்தப்பாடு பற்றிய அறிவியல் ரீதியானஒரு மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும். கரும்புச் செய்கைக்குப் பொருத்தமற்ற காணிகளில் நெல் அல்லது வேறுபயிர்களை சாகுபடி செய்வதற்கு விவசாயிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும். தரமான நடுகைப் பொருட்கள்உள்ளீடுகள் இயந்திர உபகரணங்களை வழங்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கும் கம்பனிக்கும் உரியது. விளைச்சலுக்குஉரிய விலையை பெற்றுக்கொள்ளக் கூடியவாறு விலையைத் தீர்மானிப்பதற்கான பொறிமுறை ஒன்றைத் தயாரிக்கவேண்டும். விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் போன்ற அரசாங்க நிறுவனங்கள்விவசாயிகள் தம் பயிர்ச்செய்கையை விருத்தி செய்து கொள்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும். நெற்செய்கையில் பின்பற்றப்படுகின்ற பயனுறுதி கொண்ட வழிமுறைகளை கரும்புச் செய்கைக்கு ஏற்றவாறு மாற்றிபயன்படுத்த முடியும். விவசாயிகளின் குரல் மற்றும் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை தீவிரப்படுத்த கூடியவகையில்விவசாய அமைப்புகளைப் பலப்படுத்த வேண்டும். மாவட்ட செயலாளரை முதன்மைப்படுத்திய தீர்மானம் எடுக்கும்பொறிமுறையில் பங்குகொள்ள அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பங்குகளில் 51 சதவீதத்தைக் கொண்டுள்ளஅரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் மாவட்டச் செயலாளர் விவசாயிகளுடனும் விவசாய அமைப்புகளுடனும் மிகநெருக்கமாக செயல்பட வேண்டும் என்பதுடன் முடிவெடுக்கும் தளங்களில் அவர்களின் குரலை பிரதிநிதித்துவம் செய்யவேண்டும்.
நடுத்தரகால மற்றும் நீண்டகால யோசனைகள்
அம்பாறை மாவட்டத்தில் கரும்புச் செய்கைக்காக காணிகள் சுவீகரிக்கப்பட்டதில் நிகழ்ந்த வரலாற்று ரீதியான அநீதிகுறித்து ஆராயும் செயற்பாட்டை (சுயாதீன ஆணைக்குழு மூலம்) அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும். அதில் உரிமைமீறல் மற்றும் அந்தக் காணிகளை முதல் உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பது பற்றியும் ஆராய வேண்டும். அத்தகைய காணிகளை மிக நீண்டகாலம் பிற விவசாயிகள் பயன்படுத்தி இருந்தால் அதற்காக முதல் விவசாயிகளுக்குஇழப்பீடு அல்லது மாற்றுக் காணிகளை வழங்க வேண்டும்.
காணிகளைப் பெற்றுக்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிமம் அல்லது அளிப்புப் பத்திரம் மூலம் அதற்கான உரிமையைவழங்க வேண்டும். தமது காணியில் சாகுபடி செய்யும் பயிர் மற்றும் பயிர்ச்செய்கை முறையை தீர்மானிக்கும் சுதந்திரம்அவர்களுக்கு இருக்க வேண்டும்.
ஓரின பயிர்ச்செய்கையாக ஒருங்கிணைந்த நிலையான விவசாய வழிமுறை ஒன்றை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புபற்றிய முறையான தொழில்நுட்ப மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும். வினைத்திறன் மற்றும் ஒருங்கிணைந்தகரும்புச் செய்கையின் பயிராக்க - சுற்றாடல் நடைமுறை ஆராய்ச்சி மற்றும் செயல்படுத்துகைக்கு அரசாங்கம்முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளை அச்சுறுத்தும் பயமுறுத்துதல் சம்பந்தமாக குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு பிராந்தியஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதோடு அவ்வாறான செயற்பாடுகளின் திரைமறைவில் நிற்போர்சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும். விவசாயிகளை அச்சுறுத்தும் நோக்கத்துடனும் மௌனிக்கச் செய்யும்நோக்கத்துடனும் ஆரம்பிக்கப்பட்டுள்ள அடிப்படையற்ற வழக்குத் தாக்கல் நடவடிக்கைகளை கமபனிகள் வாபஸ்பெறவேண்டும். ஒரு விதத்தில் இந்த வழக்குகளை கம்பனிகள் முன்னெடுத்துச் செல்ல முயற்சி செய்யுமானால் அரசாங்கம் விவசாயிகள் சார்பில் ஆஜராக வேண்டும் என்பதோடு அத்தகைய வழக்குகளை நிராகரிக்கச் செய்வதற்கானஅனைத்து செயற்பாடுகளையும் நீதிமன்றத்தில் முன்னெடுக்க வேண்டும்.